"விமர்சன ஆயுதம், ஆயுத விமர்சனத்தைப் பதிலிட்டு விட முடியாது என்பது உண்மைதான்; பொருளாயத ஆற்றல்கள் (Material Force), பொருளாயத ஆற்றல்களால் தூக்கியெறியப்பட வேண்டும். ஆனால், மக்கள் திரளால் கைக்கொள்ளப்படும்போது கொள்கையும் (Theory) பொருளாயத ஆற்றலாகி விடுகிறது". - காரல் மார்க்ஸ்
வியாழன், 30 டிசம்பர், 2010
டாலர் முதற்றே உலகு? (1)
"ஈரானின்
அணுசக்தித் திட்டங்களை
எதிர்க்கிறது அமெரிக்கா.
எண்ணெய் வளம் மிக்க பகுதியில்
தனது மேலாதிக்க நலன்களுக்கு
இடையூறாகவும்,
இஸ்ரேலின் அடாவடித்தனங்களுக்கு
நச்சரிப்பாகவும்
ஈரான் இருக்கிறது என்பதால்தான்.
அதுமட்டுமல்ல,
அமெரிக்காவின்
நேரடியான பொருளாதார நலன்களுடனும்
முரண்படுகிறது, ஈரான்".
ஈரான் அணுகுணுடு தயாரிப்பில் ஈடுபட்டுள்ளதாகக் கூறி அந்நாட்டுக்கு எதிராக இயன்ற வகையில் எல்லாம் நெருக்கடி கொடுத்து வருகிறது அமெரிக்கா (யு.எஸ்). ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் மூலம் பல கட்டமாகத் தடைகளை விதித்துள்ளது. அத்துடன் அரசியல், பொருளாதாரம், ராணுவத்துறைகளில் அந்நாட்டை தனிமைப்படுத்துவதன் மூலம், கையை முறுக்கி காரியம் சாதித்துக் கொள்ள நினைக்கிறது. உண்மையிலேயே ஈரானின் அணுசக்தித் திட்டங்கள்தான் அமெரிக்காவுக்குப் பிரச்சினையா? இதற்கான விடை ஈரானின் எதிர்வினையில்தான் மறைந்திருக்கிறது. அந்த எதிர்வினை இரு நாடுகளுக்கும் இடையே உள்ள முரண்பாடுகளில் ஓரம்சத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
அமெரிக்கா ஏவும் அத்தனை அம்புகளுக்கும் பதிலடியாக, ஈரான் ஒரு வேலையை முனைப்பாகச் செய்கிறது. எண்ணெய் வர்த்தகத்தை அமெரிக்க டாலருக்குப் பதிலாக, ஐரோப்பிய ஒன்றியத்தின் நாணயமான யூரோவில் மேற்கொள்வது; டாலரில் உள்ள அன்னியச் செலாவணி கையிருப்பை யூரோவுக்கு மாற்றுவதுதான் அது.
சர்வதேச பரிவர்த்தனைகளில் டாலரில் இருந்து யூரோவுக்கு மாறுவது அவ்வளவு வலிமையான ஆயுதமா? என்ற கேள்வி எழலாம். வெளிப்படையாகப் பார்த்தால் தொடர்பில்லாதது போலத் தோன்றும் சில நிகழ்ச்சிப் போக்குகள் இந்த கேள்விக்கு விடை சொல்லக் கூடும்.
உலகச் செலாவணிக் கொள்கையைத் தீர்மானிக்கும் 'தனிக்காட்டு ராஜாவாக' வலம் வந்து கொண்டிருந்த அமெரிக்க டாலருக்கு நேரடிப் போட்டியாக ஜனவரி 1, 1999-ல் முளைத்தது 'யூரோ'. ஒப்பீட்டளவில் புதிய நாணயமான யூரோவுக்கு எதிராக 40 விழுக்காடு (%) வீழ்ச்சியடைந்தது டாலரின் மதிப்பு.
80 சென்ட்டுகளாக (100 காசுகள் சேர்ந்து ஒரு ரூபாய் என்பது போல, 100 சென்ட்டுகள் சேர்ந்து ஒரு டாலர்) இருந்த யூரோவின் மதிப்பு 133 சென்ட்டுகளாக அல்லது 1.33 டாலர்களாக உயர்ந்தது. அதாவது டாலரின் மதிப்பு வீழ்ச்சியடைந்தது. யூரோவுக்கு எதிராக மட்டுமல்லாமல், யென் (ஜப்பானிய நாணயம்), யுவான் (சீன நாணயம்) ஆகியவற்றுக்கு எதிராகவும் டாலரின் மதிப்பு வீழ்ச்சி அடைந்தது. ரூபாய்க்கு எதிராகவும் அதன் மதிப்பு (2007 நடுப்பகுதியில்) வீழ்ந்தபோது நமது கவனத்துக்கும் வந்தது.
(யூரோ மற்றும் அமெரிக்க டாலரின் இன்றைய நிலவரம் அறிய இங்கே சொடுக்குங்கள்)
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Its really awesome try more ,
பதிலளிநீக்குcurrency exchange calculator